விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது

கள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :1 அக்டோபர் 2021, 2:49 pm

DIN

கள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதல்வர், (i) ப.தெட்சணாமூர்த்தி, காவல் துணை கண்காணிப்பாளர், வடக்கு மண்டலம், மத்திய புலனாய்வு பிரிவு, சென்னை, (ii) மா.குமார், காவல் ஆய்வாளர், மத்திய புலனாய்வு பிரிவு, வேலூர் மண்டலம், (iii) பா.சக்தி, காவல் ஆய்வாளர், மதுவிலக்கு அமல்பிரிவு, உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டம், (iv) ச.சிதம்பரம், காவல் உதவி ஆய்வாளர், முசிறி காவல் நிலையம், திருச்சி மாவட்டம், (v) அசோக் பிரபாகரன், தலைமை காவலர் 352, சுங்குவார்சத்திரம் காவல் நிலையம், அயல் பணி மத்திய புலனாய்வு பிரிவு, காஞ்சிபுரம் மாவட்டம் ஆகியோருக்கு, கள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக காந்தியடிகள் காவலர் விருது வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இவ்விருது, தமிழ்நாடு முதல்வரால் 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் நாள், குடியரசு தினத்தன்று வழங்கப்படும். இவ்விருதுடன், பரிசுத்தொகையாக ரூ.40,000/- ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.