பெட்ரோல், டீசல் விலை 10-வது முறையாக உயர்வு

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கடந்த 12 நாள்களில் 10-வது முறையாக சனிக்கிழமை உயர்ந்துள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்


நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கடந்த 12 நாள்களில் 10-வது முறையாக சனிக்கிழமை உயர்ந்துள்ளன.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 76 காசுகள் உயர்ந்து ரூ. 108.21-க்கு விற்பனையாகிறது. டீசல் விலையும் 76 காசுகள் உயர்ந்து ரூ. 98.21-க்கு விற்கப்படுகிறது.

கடந்தாண்டு நவம்பர் 4-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருந்த நிலையில், கடந்த மார்ச் 22 முதல் பெட்ரோல், டீசல் உயரத் தொடங்கியது. உக்ரைன் மீது ரஷியா ராணுவத் தாக்குதல் நடத்தத் தொடங்கியதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கியது.

தில்லி:

பெட்ரோல் - ரூ. 102.61 (ஒரு லிட்டர்)
டீசல் - ரூ. 93.87

மும்பை:

பெட்ரோல் - ரூ. 117.57
டீசல் - ரூ. 101.79

கொல்கத்தா:

பெட்ரோல் - ரூ. 112.19 
டீசல் - ரூ. 97.02

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com