கூட்டுறவு சங்கங்களில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை

கூட்டுறவு சங்கங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். 
கூட்டுறவு சங்கங்களில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை
Updated on
1 min read

கூட்டுறவு சங்கங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'விருதுநகர் மண்டலத்தில், ராஜபாளையம் வட்டம் க்யூ.837 முகவூர் கூட்டுறவு வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் விற்பனையாளராக பணிபுரியும் கே.தங்கதுரை மீது சுமத்தப்பட்ட பாலியல் தொந்தரவு மற்றும் பணியாளர்களை மிரட்டி பணம் வசூலித்தது ஆகிய புகார்கள் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில், 30.03.2022 அன்று நிரந்தரப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் அரிசிக் கடத்தலில் ஈடுபடுதல், பணியாளர்களை மிரட்டி பணம் வசூலித்தல், பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுதொடர்பாக புகார் அளிக்க விழைவோர் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அவர்களது தனி வாட்ஸ் அப் புகார் எண் (98840 00845)-இல் புகார் அளிக்கலாம்.

மாநிலத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடை பணியாளர்களும், எந்தவிதமான நிர்பந்தங்களுக்கும் அடிபணியாமல் அச்சமின்றி அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com