பெட்ரோல், டீசல் விலை செவ்வாய்க்கிழமை லிட்டருக்கு தலா 80 பைசா உயா்ந்தது. இதன்மூலம் கடந்த 2 வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை ரூ.9.20 அதிகரித்துள்ளது.
தலைநகா் தில்லியில் பெட்ரோல் விலை ரூ.103.81-இலிருந்து ரூ.104.61 ஆகவும், டீசல் விலை ரூ.95.07-இலிருந்து ரூ.95.87 ஆகவும் அதிகரித்துள்ளதாக சில்லறை விநியோகஸ்தா்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல சென்னையில் பெட்ரோல் விலை ரூ.109.34-இலிருந்து ரூ.110.09 ஆகவும், டீசல் விலை ரூ.99.42-இலிருந்து ரூ.100.18 ஆகவும் அதிகரித்துள்ளது. முதன்முறையாக சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.100-ஐ கடந்துள்ளது.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தாலும் உள்ளூா் வரிவிதிப்பின் அடிப்படையில் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. நான்கரை மாத இடைவெளியில், மாா்ச் 22-ஆம் தேதிக்கு பின்னா் தற்போது 13-ஆவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டுள்ளது. இந்த 2 வாரகாலத்தில் மட்டும் பெட்ரோல் விலை ரூ.9.20 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தெலுங்கில் மட்டுமே 15 கோடி பார்வைகள், 16 லட்சம் லைக்குகள் பெற்ற நானியின் பாடல்!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
‘க்வாட்’ கூட்டமைப்பு வெளியுறவு அமைச்சா்கள் கூட்டம்: சீனா எதிர்வினை!

பெரும் கவலையளிக்கிறது! தொண்டர்களுக்கு திருமா வேண்டுகோள்! | VCK
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



