செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

தம்மம்பட்டிக்கு விற்பனைக்கு வரும் கொல்லிமலை புளி

கொல்லிமலையில் விளையும் சுவை மிகுந்த புளி, தம்மம்பட்டியில் விற்பனைக்காகக் கூடைகளில் கொண்டு வரப்படுகிறது.

News image
Updated On :6 ஏப்ரல் 2022, 12:10 pm IST

கொல்லிமலையில் விளையும் சுவை மிகுந்த புளி, தம்மம்பட்டியில் விற்பனைக்காகக் கூடைகளில் கொண்டு வரப்படுகிறது.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில், குண்டனி, எண்ணாம்பாலி, தேனூர், நரியன்காடு, செங்கரை, வேலிக்காடு,கீரைக்காடு, அரவங்காடு, ஆலத்தூர், புதுவளவு, மங்களம், பெல்லக்காடு, குளத்துகாடு, நடுக்கோம்பை, அடுக்கம்   உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மலைப்பகுதிகளில் விளையும் புளியானது மிகவும் சுவையாக இருக்கும் என்பதால், இங்கு விளையும் புளிக்கு மக்களிடையே வரவேற்பு  உள்ளது.

இதனால், கொல்லிமலைப் பகுதி மக்கள், மலையடிவாரப்பகுதிகளில் உள்ள புளியஞ்சோலை, சேந்தமங்கலம், காரவள்ளி, முள்ளுக்குறிச்சி மற்றும் தம்மம்பட்டிக்கு விற்பனைக்கு கொண்டு செல்வார்கள். 

Story image

தற்போது, கொல்லிமலையில் புளி சீசன் துவங்கியுள்ளது. அதையடுத்து, தம்மம்பட்டியில் இன்று வாரச்சந்தையில் புளி விற்பனை செய்வதற்காக, மலைவாழ் மக்கள் கூடை கூடையாகப் புளியைக் கொண்டு வந்துள்ளனர். கடந்த ஆண்டு சீசனில் விற்ற விலையை விட,  இந்த ஆண்டு புளி விலை குறைந்தே விற்பனையாகிறது.

இதுகுறித்து, கொல்லிமலையைச் சேர்ந்த சேகர் கூறியதாவது, ' கடந்த ஆண்டு 100 ரூபாய் வரை, ஒரு கிலோ விற்பனையானது. இந்த ஆண்டு வெளியூர் வியாபாரிகள் யாரும் புளி வாங்க வராததால், இப்போது, 60 ரூபாய்க்குத்தான் விற்கிறோம், என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.