/

நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் எஸ்.வி.சேகர்

பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக கருத்து தெரிவித்த விவகாரத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 9:29 am

DIN

பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக கருத்து தெரிவித்த விவகாரத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.

பாஜகவைச் சேர்ந்தவரும் நகைச்சுவை நடிகருமான எஸ்.வி. சேகர், பெண் பத்திரிக்கையாளர்களை இழிவுபடுத்தும் விதமாக அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் போட்டிருந்த பதிவுக்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில் பதிவை நீக்கி மன்னிப்பு கோரினார்.  

இதுதொடர்பான வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. தவறு செய்ததற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் மன்னிப்பு கேட்க தனக்கு ஒன்றும் வெட்கமில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, 4 வழக்குகளிலும் தனித்தனியாக பிராமணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு ஏப்ரல் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.