/

மானாமதுரை சித்திரைத் திருவிழா: கிளி, யானை வாகனங்களில் ஆனந்தவல்லி, சோமநாதர் சுவாமி புறப்பாடு

மானாமதுரையில் நடைபெற்றுவரும் சித்திரைத் திருவிழாவில் கிளி, யானை வாகனங்களில் ஆனந்தவல்லி, சோமநாதர் சுவாமியும் ஞாயிற்றுக்கிழமை வீதி உலா வந்தனா்.

News image
மானாமதுரையில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன் கிளி வாகனத்திலும் சோமநாதர் சுவாமி யானை வாகனத்திலும் புறப்பாடாகி வீதி உலா வந்தனர்.
Updated On :1 பிப்ரவரி 2024, 8:56 am

DIN

மானாமதுரை:  மானாமதுரையில் நடைபெற்றுவரும் சித்திரைத் திருவிழாவில் கிளி, யானை வாகனங்களில் ஆனந்தவல்லி, சோமநாதர் சுவாமியும் ஞாயிற்றுக்கிழமை வீதி உலா வந்தனா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. 

திருவிழாவின் இரண்டாவது நாள் மண்டகப்படியின்போது புதிதாக உருவாக்கப்பட்ட அன்ன வாகனத்தில் ஆனந்தவல்லி அம்மனும் பூத வாகனத்தில் பிரியாவிடை சமேதமாக சோமநாத சுவாமியும் எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து நான்காவது நாள் மண்டகப்படியின்போது இரவு ஆனந்தவல்லி அம்மன் கிளி வாகனத்திலும் சோமநாதர் சுவாமி யானை வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 

Story image

மானாமதுரை சித்திரை திருவிழாவில் நான்காம் நாள் மண்டகப்படியின்போது கிளி வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலித்த ஆனந்தவல்லி அம்மன்.

அதைத்தொடர்ந்து தீபாராதனைகள் நடைபெற்று சுவாமி புறப்பாடு நடந்தது. கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் அம்மனும் சுவாமியும் வீதி உலா வந்தனர். 
வீதிகளில் மக்கள் சுவாமியை வரவேற்று பூஜைகள் நடத்தி தரிசனம் செய்தனர். சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஆனந்தவல்லி அம்மன் கோயில் வளாகம் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்து இரவில் கண்ணைக் கவரும் வகையில் ஜொலிக்கறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.