பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி! புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி!
/

மானாமதுரை ஸ்ரீவீர அழகர் கோயிலில் சித்திரை திருவிழா தொடக்கம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ வீர அழகர் கோயிலில் சித்திரை திருவிழா செவ்வாய்க்கிழமை  காலை தொடங்கியது. 

News image

மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழா தொடக்கமாக காப்பு கட்டுதலின்போது ஸ்ரீதேவி பூதேவி சமேதமாய் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள்

Updated On :12 ஏப்ரல் 2022, 0:55 pm IST

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ வீர அழகர் கோயிலில் சித்திரை திருவிழா செவ்வாய்க்கிழமை  காலை தொடங்கியது. 

சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்திற்குள்பட்ட இக்கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கமாக மூலவர் சுந்தரராஜ பெருமாளுக்கும் அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீதேவி பூதேவி சமேத உற்சவருக்கும் காலை 8 மணிக்கு காப்புக்கட்டுதல் நடைபெற்றது. 

சுந்தரராஜ பெருமாளுக்கு காப்பு கட்டப்படுகிறது

சுந்தரராஜ பெருமாளுக்கு காப்பு கட்டப்படுகிறது

அதன்பின் உற்சவர் வீர அழகருக்கு சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் நடைபெற்றன. காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் இரவு வீர அழகர் பல்வேறு மண்டகப்படிகளில் அலங்காரத்துடன் எழுந்தருளி வீதி உலா வருதல் நடைபெறும்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக அழகர் எதிர்சேவை வரும் 15ஆம் தேதி நள்ளிரவு நடைபெறும். மறுநாள் 16 ஆம் தேதி காலை வைகை ஆற்றுக்குள் அழகர் இறங்கும் உற்சவமும் நடைபெறுகிறது.

காப்புக்கட்டுதல் முடிந்து பெருமாளுக்கு நடைபெற்ற மகா தீபாராதனை

காப்புக்கட்டுதல் முடிந்து பெருமாளுக்கு நடைபெற்ற மகா தீபாராதனை

அதன்பின் 17-ஆம் தேதி இரவு மானாமதுரை கிராமத்தார் மண்டகப்படியில் வைகை ஆற்றுக்குள் நிலாச்சோறு வைபவம் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்தினர், மண்டகப்படிதாரர்கள் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.