சேலத்தில் சந்தேகத்தினால் மனைவியைக் கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள கோவிந்தராஜபாளையத்தைச் சேர்ந்த ஜெயக்குமாரும் அவரது மனைவியும் 15 வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
மேலும் ஜெயக்குமாரின் மனைவி சங்கீதா படித்து பட்டம் பெற்றவர். அவர் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சங்கீதா அலைபேசியில் உறவினர்களுடன் பேசினாலும் ஜெயக்குமார் சந்தேகப்பட்டு குடும்பத்தில் தகராறு செய்வது வழக்கம்.
இந்நிலையில் வியாழக்கிழமை சங்கீதாவின் வீட்டிற்கு போன் செய்த ஜெயக்குமார், சங்கீதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து அங்கு வந்த சங்கீதாவின் பெற்றோர், உடலில் காயங்கள் இருந்ததால் மல்லியகரை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீஸார் சங்கீதாவின் உடலைக் கைப்பற்றி ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் சங்கீதாவை அடித்துக் கொன்று தூக்கில் தொங்கவிட்டது தெரிய வந்தது. இதனையடுத்து ஜெயக்குமாரை கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
சசியின் நூறு சாமி முதல் தோற்ற போஸ்டர்!

காதலனுடன் தப்பிச் செல்ல ரகசிய திட்டம்: மனைவி, 5 குழந்தைகளை வெட்டிக் கொன்ற கணவன் கைது!

45,000 மெட்ரிக் டன் எல்பிஜி! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!

மூட்டு வலிக்கு என்ன செய்யலாம்?
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

