இப்பகுதிகளில் வெள்ளநீர் சூழாமல், நிரந்தர தீர்வு காணும் வகையில், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், வெள்ளிவாயல் கிராமம் அருகே கொசஸ்தலையாற்றின் வலது கரையில் சுமார் 1000 மீட்டர் வரை அலைக்கற்களுடன் கூடிய கரை அமைக்கும் பணி மற்றும் சென்னை மாவட்டம், திருவொற்றியூர் வட்டம், இடையான்சாவடி, சடையான்குப்பம், மணலிபுதுநகர் ஆகிய கிராமங்களின் வழியாக செல்லும் கொசஸ்தலையாற்றின் 4000 மீட்டர் வரை கரையை பலப்படுத்துல் மற்றும் இடையான்சாவடி அருகே கொசஸ்தலையாற்றின் இடதுகரையில் 2000 மீட்டர் வரை கரையினை மறுசீரமைக்கும் பணி ஆகியவற்றிற்கு 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இப்பணிகள் தொடங்கப்படவுள்ளதையொட்டி முன்னேற்பாடு பணிகளை முதல்வர் இன்று பார்வையிட்டு, ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.