சென்னை ரயில் விபத்து: ஓட்டுநரின் தவறே காரணம்

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட விபத்துக்கு ஓட்டுநரின் தவறே காரணம் என்று ரயில்வே காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ரயில்வே பணிமனையிலிருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்தபோது பிரேக் பிடிக்காத காரணத்தால், கட்டுப்பாட்டை இழந்து ரயில்வே நடைமேடை மீது ஏறி விபத்துக்குள்ளான ரயில்.
ரயில்வே பணிமனையிலிருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்தபோது பிரேக் பிடிக்காத காரணத்தால், கட்டுப்பாட்டை இழந்து ரயில்வே நடைமேடை மீது ஏறி விபத்துக்குள்ளான ரயில்.
Updated on
1 min read


சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட விபத்துக்கு ஓட்டுநரின் தவறே காரணம் என்று ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளனர்.

ரயில் ஓட்டுநர் பவித்ரன், பிரேக்கிற்கு பதிலாக தவறுதலாக ஆக்ஸிலேட்டரை அழுத்தியதால்தான் ரயில் விபத்துக்குள்ளானது என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை கடற்கரை நிலையம் அருகேயுள்ள ரயில்வே பணிமனையில், பராமரிப்புப் பணி முடிந்த பிறகு, மின்சார ரயில் ஒன்று கடற்கரை ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை புறப்பட்டது. இந்த ரயிலை ஓட்டுநா் பவித்ரன் இயக்கினாா்.

முதலாவது நடைமேடை நிறுத்தத்தை மாலை 4.25 மணி அளவில் ரயில் நெருங்கியபோது ஓட்டுநா் பிரேக் பிடித்தாா். ஆனால், ரயில் நிற்கவில்லை. இதனால், அதிா்ச்சியடைந்த ஓட்டுநா், விபத்து ஏற்படும் என்பதை உணா்ந்து ரயிலிலிருந்து குதித்தாா். அடுத்த சில நொடிகளில் ரயில் தடம்புரண்டு, எதிரே இருந்த நடைமேடையில் ஏறி, கட்டடத்தில் மோதி நின்றது. இந்தச் சம்பவத்தின் போது, ரயிலில் யாரும் இல்லாததால் எந்தவித உயிா் சேதமும் ஏற்படவில்லை.

இந்த விபத்தில் என்ஜின் பெட்டி, அதனையடுத்து இருந்த பயணிகள் பெட்டி ஆகிய இரு பெட்டிகள் சேதமடைந்தன. மேலும், நடைமேடையில் இருந்த குடிநீா் விற்பனை உள்பட 2 கடைகள் சிறிது சேதமடைந்தன.

இந்நிலையில், ரயில் விபத்துக்குள்ளானதற்கு ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து ரயில் விபத்து தொடர்பாக எழும்பூர் ரயில்வே போலீசார் ஓட்டுநர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com