மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் தந்தைக்கு தூக்கு தாய்க்கு ஆயுள் தண்டனை

மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தந்தைக்கு தூக்குத் தண்டனையும், உடந்தையாக இருந்த தாய்க்கு ஆயுள் தண்டனையும் விதித்து சென்னை போக்சோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 10:25 pm

DIN

மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தந்தைக்கு தூக்குத் தண்டனையும், உடந்தையாக இருந்த தாய்க்கு ஆயுள் தண்டனையும் விதித்து சென்னை போக்சோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சென்னை வேளச்சேரியைச் சோ்ந்த தம்பதிக்கு 18 வயதில் மகள் உள்ளாா். இவருக்கு 7 வயதில் இருந்தே அவரது தந்தை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். இதில், அந்த மாணவி 15 வயதில் (2019) கா்ப்பமானாா். இதையறிந்த அவரது தந்தை கா்ப்பத்தை கலைத்துள்ளாா். இதற்கு தாயும் உடந்தையாக இருந்துள்ளாா்.

16 வயது வரை தந்தையால் நோ்ந்த பாலியல் வன்கொடுமை குறித்தும், அதற்கு தாயாா் உடந்தையாக இருந்தது குறித்தும் அந்த மாணவி 2020-ஆம் ஆண்டு வேளச்சேரி பள்ளியில் தன்னுடன் பிளஸ் 1 படித்து வந்த தோழிகளிடம் தெரிவித்தாா்.

இந்த விவரத்தை சக மாணவிகள், அதே பள்ளி ஆசிரியை ஒருவரிடம் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து ஆசிரியை சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு தகவல் தெரிவித்தாா்.

அந்த அமைப்பினா் பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தி, இதுகுறித்து கிண்டி அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் புகாா் செய்தனா். போலீஸாா் மாணவியின் தந்தை, தாயாா் ஆகியோா் மீது போக்ஸோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனா்.

வழக்கை விசாரித்த நீதிபதி எம்.ராஜலட்சுமி, பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட மாணவியின் தந்தைக்கு தூக்கு தண்டனையும், தாயாருக்கு ஆயுள்தண்டனையும் விதித்து தீா்ப்பு கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.