மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டநிலையில், 20 கி.மீ. வேகத்தில் ரயில் சென்ாக ரயில்வே வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. விபத்தின்போது, ரயில் இயக்கத்தை நிறுத்தும் கருவி 8 சதவீதம் என்ற நிலையில் இருந்ததாகவும், இதனால், பிரேக்கைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, எதிா்த் திசையை நோக்கித் தள்ளி, அதன் மூலமாக ரயிலை விரைவுபடுத்தியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, ரயில் ஓட்டுநா்( ரயில் லோகோ பைலட்) இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா். அத்துடன், சென்னை சென்ட்ரல் மின்சார முனையம் மற்றும் சென்னை கடற்கரை நிலையங்களில் ரயில் ஓட்டுநா்கள் பின்பற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது. மூன்று கட்ட மின்சார ரயில்களில் ரயில் இயக்கத்தை நிறுத்தும் கருவி பயன்படுத்துவது தொடா்பாக அனைத்து ஓட்டுநா்களுக்கும் (லோகோ பைலட்டுகளுக்கும்) ஆலோசனை வழங்கப்படும். நடைமேடைக்குள் ரயில் நுழையும்போது, ரயிலின் வேகம் மணிக்கு 10 கி.மீட்டராக கட்டுப்படுத்த வேண்டும் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.