சென்னை ஐஐடியில் மேலும் 14 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு 196 அக உயர்ந்துள்ளது.
சென்னை ஐஐடியில் தமிழகம் மட்டுமின்றி 15 மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்கள் தங்கிப் படித்து வருகின்றனா். கடந்த 19, 20-ஆம் தேதிகளில் விடுதியில் தங்கிப் படிக்கும் சில மாணவா்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, ஐஐடியில் ஆய்வு செய்த சுகாதாரத் துறைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், மாணவா்கள், பேராசிரியா்கள், பணியாளா்கள் என 7,490 பேருக்கும் கரோனா பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை வந்த பரிசோதனை முடிவுகளில் மேலும் 11 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன்மூலம், தொற்று பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக இருந்து.
இன்று காலை வந்த முடிவுகளின் படி, மேலும் 14 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 196 ஆக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.