இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நாகாலாந்து முதல்வர் நன்றி!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நாகாலாந்து முதல்வர் நிஃபியு ரியோ நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். 

News image
Updated On :2 ஆகஸ்ட் 2022, 12:31 pm

DIN

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நாகாலாந்து முதல்வர் நிஃபியு ரியோ நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதியுள்ளார். 

மருத்துவ சிகிச்சைக்காக வேலூர் மற்றும் ராணிப்பேட்டையில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனைகளுக்கு வரும் நாகாலாந்தைச் சேர்ந்தவர்கள் தங்கும் வகையில் விருந்தினர் இல்லம் அமைப்பதற்காக தமிழக அரசு நிலம் வழங்கியதற்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதினார். 

நாகாலாந்து முதலமைச்சர் நிஃபியு ரியோ எழுதியுள்ள கடிதத்தில், 'வேலூர் மற்றும் ராணிப்பேட்டையில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனைகளுக்கு மருத்துவ சிகிச்சைக்காக வரும் நாகலாந்து மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு விருந்தினர் இல்லம் அமைப்பதற்காக, ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், ராபாக்கம் கிராமத்தில் 10,000 சதுர அடி நிலத்தினை நாகாலாந்து அரசுக்கு இலவசமாக வழங்கியதற்கு நன்றி. 

மருத்துவ வசதி பெறுவதற்காக வேலூர் மற்றும் இராணிப்பேட்டை சி.எம்.சி. மருத்துவமனைகளுக்கு வரும் நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்' என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.