தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பால் பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரம்; ஆவின் மூலம் பாட்டில் குடிநீர்: அசத்தும் அறிவிப்பு

ஆவின் பால் பதப்படுத்தும் நிலையங்களில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் பாட்டீல் குடிநீர் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் அறிவித்துள்ளார்.

News image

பால் பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரம்; ஆவின் மூலம் பாட்டில் குடிநீர்: அசத்தும் அறிவிப்பு

Updated On :3 ஆகஸ்ட் 2022, 9:29 am

DIN

ஆவின் பால் பதப்படுத்தும் நிலையங்களில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் பாட்டீல் குடிநீர் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் அறிவித்துள்ளார்.

மேலும், ஆவின் பால் பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரங்களை வெளியிடுவது குறித்து பரிசீலனை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் இன்று வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் கூறியிருப்பதாவது, ஆவின் சார்பில் 1லிட்டர் மற்றும் அரைலிட்டர் பாட்டீல்களில் குடிநீர் அடைத்து விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆவினுக்குச் சொந்தமான 28 பால் நிலையங்களிலும் குடிநீர் பாட்டில் தயாரிக்கப்படும். ஆவின் பால் நிலையங்களில் இருக்கும் குடிநீர் சுத்திகரிப்பான்கள் மூலம், பாட்டில் குடிநீர் தயாரித்து அவை விற்பனை செய்யப்படும். 

மேலும், ஆவின் பால் பாக்கெட்டுகள் மீது திரைப்பட விளம்பரங்களை வெளியிடுவது குறித்து பரிசலிக்கப்படும். தற்போது பால் பாக்கெட்டுகள் மீது அரசு விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி, சினிமா விளம்பரங்களையும் மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று அறிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.