இன்று 5 மாவட்டங்களில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு
திருப்பூா், நீலகிரி, தேனி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் வியாழக்கிழமை (ஆக.4) அதி பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.


திருப்பூா், நீலகிரி, தேனி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் வியாழக்கிழமை (ஆக.4) அதி பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு: தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வியாழக்கிழமை அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை முதல் அதி பலத்த மழையும், தென்காசி, விருதுநகா் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழையும், நாமக்கல், சேலம், தருமபுரி, திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, மதுரை, திருநெல்வேலி, வேலூா் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
ஆக.5: நீலகிரி, ஈரோடு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை ஓரிரு இடங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழையும், தருமபுரி, திருப்பத்தூா், வேலூா் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில்... சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...