சென்னை கொளத்தூரில் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்க மாவட்ட ஆட்சியருக்கு அனுமதியளித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை கொளத்தூா் பகுதியில் உள்ள ஒரு ஏக்கா் நிலத்தில் குப்பைக் கிடங்கு அமைப்பதற்கான நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி இறங்கியது. ஆனால், அந்த நிலம் தங்களுக்குச் சொந்தமானது எனக் கூறி குப்பைக் கிடங்கு அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, வெற்றி என்பவா் உள்ளிட்ட இருவா், உரிமையியல் நீதிமன்ற உத்தரவுகளையும், தீா்வு அதிகாரி பிறப்பித்த உத்தரவையும் இணைத்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்ற உத்தரவின்படி நிலம் வெற்றி உள்ளிட்ட இருவருக்குச் சொந்தமானது என்பதால், குப்பைக் கிடங்கு அமைக்க கூடாது என உத்தரவிட்டது.
இந்த நிலையில், போலி ஆவணங்களைத் தாக்கல் செய்து நிலம் தங்களுக்குச் சொந்தமானது என உரிமையியல் நீதிமன்றத்தில் உத்தரவை பெற்றுள்ளதாகக் கூறி, இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி சென்னை மாவட்ட ஆட்சியா் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், போலி ஆவணங்கள் மூலம் நிலம் தங்களுக்கு சொந்தமானது என உரிமையியல் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றுள்ளது நிரூபணமாகியுள்ளதாகக் கூறி, உரிமையியல் நீதிமன்ற உத்தரவுகளை ரத்து செய்து உத்தரவிட்டாா். மேலும், அரசுக்குச் சொந்தமான நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கும்படியும், போலி ஆவணங்கள் பயன்படுத்தி உரிமையியல் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றவா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படியும் சென்னை மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக ஆட்சி அமைந்தவுடன் ரூ.8,000 கூப்பன் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும்

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

வேட்பாளா்களுக்கு ஆதரவாக குடும்ப வாரிசுகள்

சாதி பாகுபாடுகளைக் கடந்து முன்னேற வேண்டும்: குடியரசுத் தலைவா்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


