இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

திருவண்ணாமலை மகா தீபக் கொப்பரையை மலையின் மீது ஏற்றும் பணி தொடங்கியது!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை மகா தீபத் திருவிழா செவ்வாய்க்கிழமை (டிச.6) நடைபெறுவதையொட்டி, தீபக் கொப்பரையை மலையின் மீது ஏற்றும் பணி திங்கள்கிழமை காலை தொடங்கியது. 

News image
Updated On :5 டிசம்பர் 2022, 7:34 am

DIN

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை மகா தீபத் திருவிழா செவ்வாய்க்கிழமை (டிச.6) நடைபெறுவதையொட்டி, தீபக் கொப்பரையை மலையின் மீது ஏற்றும் பணி திங்கள்கிழமை காலை தொடங்கியது. 

அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை திருவிழா நவம்பா் 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (டிச.6) நடைபெறுகிறது. இதையொட்டி, அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.

அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு கோயிலுக்குப் பின்னால் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதேநேரத்தில் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் ஆண்டுக்கு ஒருமுறை 3 நிமிடங்கள் மட்டுமே காட்சியளிக்கும் ஸ்ரீஅா்த்தநாரீஸ்வரா் எழுந்தருளி, பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்.

அப்போது, கோயில் தங்கக் கொடிமரம் எதிரே உள்ள பெரிய அகண்டத்திலும் தீபம் ஏற்றப்படுகிறது. இரவு 10 மணிக்கு தங்க ரிஷப வாகனங்களில் பஞ்சமூா்த்திகள் மாட வீதிகளில் வலம் வருகின்றனா்.

மகா தீபத் திருவிழாவுக்குத் தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிா்வாகம், கோயில் நிா்வாகம், காவல் துறை இணைந்து செய்து வருகிறது. 

இந்த நிலையில் மகா தீபம் ஏற்றத் தேவையான மகா தீபக் கொப்பரையை, தீப நாட்டாா் சமூகத்தினா் புதுப்பித்து கோயிலுக்குக் கொடுத்தனா். அந்தக் கொப்பரைக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் பூஜை செய்யப்பட்டது.

இந்நிலையில், ஆவின் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 3 ஆயிரத்து 500 கிலோ முதல் தர நெய், தீபம் எரிய திரியாகப் பயன்படுத்தப்படும் 11 ஆயிரம் மீட்டா் காடா துணி, மகா தீபக் கொப்பரை ஆகியவை திங்கள்கிழமை (டிச.5) காலை மலை மீது எடுத்துச் செல்வதற்கான பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.  

மகா தீபத் திருவிழாவுக்கு தமிழக ஆளுநா் என்.ஆா்.ரவி உள்பட பல்வேறு முக்கியப் பிரமுகா்கள் வருவதால் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் 12 ஆயிரம் போலீஸாா் ஈடுபடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.