மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.9) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிக அளவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், புதுச்சேரி, காரைக்கால் கடற்கரைக்கு பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வு படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. அது நேற்றிரவு 11.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது.
மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ள புயல், தற்போது காரைக்காலுக்கு கிழக்கு - தென் கிழக்கே 460 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு 550 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது.
இதனால் புதுச்சேரி, காரைக்காலிலுள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல புதுச்சேரி, காரைக்கால் கடற்கரைக்கு பொழுதுபோக்குக்காகவும், சுற்றுலாவினரும் செல்லக்கூடிய நிலையில், யாரும் கடற்கரைக்குச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


