/

முதல்வர் மு.க ஸ்டாலின் உருவத்தில் 92 கிலோ கேக்!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவத்தில் 92 கிலோ கேக் தயாரிக்கப்பட்டது. 

News image
முதல்வர் மு.க ஸ்டாலின் உருவத்தில் தயாரிக்கப்பட்ட 92 கிலோ கேக்
Updated On :1 பிப்ரவரி 2024, 11:04 am

DIN

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவத்தில் 92 கிலோ கேக் தயாரிக்கப்பட்டது. 

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்வதாகவும், அவரை உற்சாகப்படுத்தும் விதமாகவும், திருச்சி சத்திர பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பேக்கரியில் மு.க ஸ்டாலின் உருவத்தில் 6 அடி உயரமும், 92 கிலோ எடையும் கொண்ட பிரம்மாண்டமான கேக் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த கேக்கை 24 மணி நேரத்தில் 90 கிலோ சர்க்கரை, 80 முட்டை கலந்த கலவையைக் கொண்டு பேக்கரி ஊழியர்கள் 4 பேர் குழுவாகச் சேர்ந்து தயாரித்துள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட  இந்த கேக் இரண்டு நாள்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தமிழக முதல்வர் உருவத்தில் உள்ள கேக்குடன் செல்பி எடுத்துச் செல்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.