2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

புயல்தான் கரையை கடந்துவிட்டதே? இன்றும் தமிழகத்தில் மழை பெய்யுமா?

அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர புயலாக வலுப்பெற்று பின்னர் புயலாக வலுவிழந்து நேற்றிரவு கேளம்பாக்கம் அருகே கரையைக் கடந்தது.

News image
Updated On :10 டிசம்பர் 2022, 10:31 am

DIN

சென்னை: அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர புயலாக வலுப்பெற்று பின்னர் புயலாக வலுவிழந்து நேற்றிரவு கேளம்பாக்கம் அருகே கரையைக் கடந்தது.

இந்த நிலையில், இன்று தமிழகத்தின் 6 மாவட்டங்களில் அதிகனமழையும், 6 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு 10 மணியளவில் மாண்டஸ் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது. சுமார் 5 மணிநேரத்திற்கு பிறகு அதிகாலை 3 மணியளவில் மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.

மேலும், இன்று காலை வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்த மாண்டஸ் புயல் பின்னர் படிப்படியாக வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் வேலூருக்கு அருகே நகர்ந்து வரும் மாண்டஸ் காரணமாக இன்று ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுளள்து.

இன்று வட தமிழகம், புதுச்சேரிரயில் அவ்வப்போது பலத்த தரைக்காற்று மணிக்கு 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுளள்து.

மேலும், தமிழகத்தில் நாளை ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம்,  நாமக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னையை பொருத்தவரை இரண்டு நாள்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.