12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

மேட்டூர் அணை (கோப்புப்படம்)

Published On :

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தாலும், கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படாததாலும் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது. 

நேற்று முன்தினம் காலை வினாடிக்கு 9,600 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து, மாலையில் வினாடிக்கு 7,600 கன அடியாக குறைந்தது. நேற்று மாலை வினாடிக்கு 5600 கன அடியாக குறைந்தது.

இன்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 5,600 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 5,000 கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.