/

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 16-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது.

News image
மேட்டூர் அணை
Updated On :23 டிசம்பர் 2022, 2:48 am

DIN

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் 16-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது.

இன்று(வெள்ளிக்கிழமை) காலை 16-வது நாளாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடித்து வருகிறது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் லேசான மழையின் காரணமாக நேற்று முன்தினம் மாலை முதல் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9,600 கன அடியாக நீடித்து வருகிறது.

நீர்வரத்து அதிகரித்துள்ளதால்  மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு  வினாடிக்கு  9,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.