நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புத்தாண்டு கொண்டாட புதுச்சேரி செல்வோர் கவனிக்க..

2022ஆம் ஆண்டின் கடைசி நாளில் இருக்கிறோம். பலரும் இன்றே புத்தாண்டு கொண்டாட்டம் குறித்து திட்டமிட்டிருப்போம்.

News image

முழு அடைப்பையொட்டி, பேருந்துகள் இயக்கப்படாததால் திங்கள்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்ட புதுச்சேரி புதிய பேருந்து நிலையம்.

Updated On :31 டிசம்பர் 2022, 12:30 pm

DIN

2022ஆம் ஆண்டின் கடைசி நாளில் இருக்கிறோம். பலரும் இன்றே புத்தாண்டு கொண்டாட்டம் குறித்து திட்டமிட்டிருப்போம். எனவே, புத்தாண்டு கொண்டாட சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள் கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக புதுச்சேரி செல்ல திட்டமிட்டிருந்தால், நிச்சயம் இது பயனுள்ள தகவலாக இருக்கும்.

அதாவது, கிழக்குக் கடற்கரை சாலை வழியாக சொந்த வாகனங்களில் அதுவும் இரவு நேரத்தில் செல்வதாக இருந்தால், ஒரு முறைக்கு இரு முறை நன்றாக சிந்தித்து முடிவெடுங்கள். ஏனென்றால், கிழக்குக் கடற்கரை சாலையில் நடுவில் கொஞ்சம் பாக்கத்தைக் காணோம் என்பது போல, பல இடங்களில் சாலைகள் பல்லாங்குழிகளாக மாறி, வாகன ஓட்டிகளைப் பார்த்து நகைத்துக் கொண்டிருக்கிறது.

மாமல்லபுரம் முதல் புதுச்சேரி வரையிலான 95 கிலோ மீட்டர் தொலைவுள்ள சாலை, தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் வருகிறது. இதனை விரிவாக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், இப்பகுதியில் உள்ள சுங்கச்சாவடிகளும் மூடப்பட்டுவிட்டன.

சுங்கச்சாவடிகள் மூடப்பட்டுவிட்டதால், இந்தச் சாலைகள் பராமரிப்பு இல்லாமல், படுகுழிகளுடன் யாரை விழுங்குவது என்று காத்திருக்கின்றன.

இரவில் இப்பகுதியில் புதிதாக வருவோர் நிச்சயம் ஓரிரு பள்ளங்களில் தட்டுத்தடுமாறித்தான் செல்கிறார்கள் என்றும், இவ்வழியாக இரண்டு முறை பயணித்தால் நிச்சயம் முதுகுவலி இலவசம் என்றும் இப்பாதையை தினமும் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் கூறுகிறார்கள்.

புத்தாண்டு கொண்டாட்டம் என்றால், குறிப்பாக இளசுகள்தான், இரு சக்கர வாகனத்தில் பறப்பார்கள். சாலைகள் நன்றாக இருந்தாலே விபத்து ஏற்படும் அபாயம் அதிகமிருக்கும் நிலையில், சாலைகள் மிக மோசமாக இருப்பதால் இளசுகளாக இருந்தாலும் பெரியவர்களாக இருந்தாலும் கிழக்குக் கடற்கரைச் சாலையை கடப்பதாக இருந்தால் கவனம் தேவை.. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.