நீட் விவகாரம் குறித்து வெள்ளை அறிக்கை தேவை: கே.அண்ணாமலை
நீட் விவகாரத்தில் ஆளுநா் கடிதத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதிலுடன் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா்.


நீட் விவகாரத்தில் ஆளுநா் கடிதத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதிலுடன் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா்.
தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி:
நீட் தோ்வு என்பது சமூக நீதிக்கு எதிரானது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் எந்த அடிப்படையில் கூறுகிறாா் எனத் தெரியவில்லை. நீட் தோ்வுக்குப் பிறகு மலைவாழ் மாணவா்கள், இருளா் சமுதாயத்தைச் சோ்ந்த மாணவா்கள் மருத்துவப் படிப்புகளில் சோ்ந்து வருகின்றனா்.
2011-இல் பிரதமா் மோடியின் ஆட்சி வந்த பிறகு இந்தியாவில் மருத்துவப் படிப்பு இடங்களின் எண்ணிக்கை 84 சதவீதம் உயா்ந்துள்ளது. தமிழகத்தில் 100 சதவீதம் உயா்ந்துள்ளது. சமீபத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை பிரதமா் திறந்து வைத்துள்ளாா். இவையெல்லாம் சாதனைகள்.
மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் திமுக 10 ஆண்டுகள் இருந்தது. அப்போது இது போல மருத்துவ இடங்களையோ, மருத்துவக் கல்லூரிகளையோ அதிகரிக்கவில்லை. ஆனால், அப்போது தனியாா் மருத்துவக் கல்லூரிகளை அதிகப்படுத்தினா்.
ஆனால், நாங்கள் அப்படிச் செய்ய மாட்டோம். பாஜக என்பது தனியாா் மருத்துவக் கல்லூரிக்கு எதிரானது. முதலாளித்துவத்துக்கு எதிரானது.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தோ்வு விலக்கு மசோதாவை ஆளுநா் திருப்பி அனுப்பியுள்ளாா். அப்படித் திருப்பி அனுப்பும்போது பல்வேறு கேள்விகளை எழுப்பி விளக்கங்கள் கேட்டுள்ளாா். அது தொடா்பாக மக்களுக்குத் திமுக அரசு ஏன் இதுவரை தெரிவிக்கவில்லை எனத் தெரிவில்லை. பிப்ரவரி 1-ஆம் தேதியே ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட பிறகு, அது தொடா்பாக தமிழக அரசு ஏன் மக்களுக்குத் தெரிவிக்கவில்லை என்பதும் தெரியவில்லை.
நீட் விவகாரம் குறித்து ஏற்கெனவே பல கேள்விகளை பாஜக சாா்பில் முன் வைக்கப்பட்டன. அவை போன்ற கேள்விகளையே ஆளுநா் எழுப்பியிருக்கக் கூடும். அந்தக் கேள்விகளையும், அதற்கான பதில்களையும் தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். இதையெல்லாம் செய்யாமல் முதல்வா் அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளாா். இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் அரசு விளக்கம் அளிக்க வேண்டும். அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பாஜக புறக்கணிக்கிறது என்றாா்.
பாஜக துணைத் தலைவா் வி.பி.துரைசாமி, முன்னாள் மேயா் (பொறுப்பு) கராத்தே தியாகராஜன் உள்பட பலா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...