தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

அதிமுக வெற்றி பெறுவதற்கான சூழல் உருவாகியுள்ளது - ஓ. பன்னீர்செல்வம் 

அதிமுக வெற்றி பெறுவதற்கான சூழல் உருவாகியுள்ளது என்றார் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம்.

News image
கூட்டத்தில் பேசுகிறார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்.
Updated On :11 பிப்ரவரி 2022, 12:21 pm

DIN

தஞ்சாவூர்: அதிமுக வெற்றி பெறுவதற்கான சூழல் உருவாகியுள்ளது என்றார் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம்.

தஞ்சாவூரில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை வெள்ளிக்கிழமை பிற்பகல் அறிமுகம் செய்து வைத்து அவர் பேசியது:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு சாதகமான சூழல் உருவாகி வருகிறது.  கடந்த 10 மாதங்களில் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாத மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலின்போது திமுக 505 வாக்குறுதிகளைக் கொடுத்தது. ஆனால் 10 மாதங்களாகியும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல விவசாயக் கடன், மாணவர்களுக்கான கல்வி கடனையும் ரத்து செய்யவில்லை. இப்படிப் பல்வேறு வாக்குறுதிகளைக் கூறி மக்களை நம்ப வைத்து ஏமாற்றியுள்ளது.

மாதம் ரூ. 1,000 தருவதாகக் கூறினீர்களே என உதயநிதி ஸ்டாலினிடம் மக்கள் கேட்கின்றனர். இன்னும் 4 ஆண்டுகள் இருக்கிறது என பதிலளிக்கிறார். நீட் தேர்வு ரத்து குறித்து கேட்டாலும், அதற்கும் நான்காண்டுகள் இருக்கிறது எனக் கூறுகிறார். இந்த அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக இருப்பதால், நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தலும் உறுதியாக வரும்.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்களை வழங்கிய ஒரே ஆட்சி திமுக ஆட்சியாகத்தான் இருக்கும். இந்தப் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ. 500 கோடிக்கு முறைகேடு நிகழ்ந்தது. இது தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கையில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்கள் வழங்கியிருப்பது தெரிய வந்தது.  இதற்காக ஸ்டாலின் ராஜிநாமா செய்யத் தயாரா?

அடுத்து வருகிற தேர்தலில் நாம் ஆட்சியில் அமர்வதற்கு அச்சாரமாக இந்தத் தேர்தல் உள்ளது. அதற்குச் சாதகமான சூழல் உருவாகியுள்ளது. அனைவரும் ஓரணியாக இருந்து அதிமுக 100 சதவீதம் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். எங்கு சென்றாலும் மக்கள் நமக்கு ஆதரவாக இருக்கின்றனர். இதை வெற்றியாக மாற்றுவதற்கு நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார் ஓ. பன்னீர்செல்வம்.

இக்கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர். வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.