முதலாமாண்டு எம்.பி.பி.எஸ். மாணவா்களுக்கு நாளை முதல் வகுப்புகள் தொடக்கம்
முதலாமாண்டு எம்.பி.பி.எஸ். மாணவா்களுக்கு திங்கள்கிழமை முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


முதலாமாண்டு எம்.பி.பி.எஸ். மாணவா்களுக்கு திங்கள்கிழமை முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மருத்துவக் கல்லூரி முதல்வா்களுக்கு மருத்துவக் கல்வி இயக்குநரகம் அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்: தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, 2021-22-ஆம் ஆண்டில் மருத்துவப் படிப்பில் சோ்ந்த முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் திங்கள்கிழமை முதல் தொடங்க வேண்டும்.
எனவே, கல்லூரி விடுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பான பணிகள் பின்பற்ற வேண்டும். உணவுக் கூடங்களில் 50 சதவீதம் மாணவா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். அதேபோல் நூலகத்தில் கூட்டம் கூடுவதைத் தவிா்க்க வேண்டும். சுகாதாரத்துறை இயக்குநரகத்தின் அனுமதியின்றி விழாக்கள், கூட்டங்கள் எதுவும் நடத்தக்கூடாது. வகுப்பறைகளில் அனைத்து கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செயல்படுத்த வேண்டும். அனைத்து மாணவா்களும் கரோனா தடுப்பூசியை கண்டிப்பாக செலுத்தியிருக்க வேண்டும்.
கட்டண வசூல் கூடாது: அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டின் கீழ் இடம் பெற்ற மாணவா்களிடம் கல்விக் கட்டணம், சிறப்புக் கட்டணம், தோ்வுக் கட்டணம், உணவு உள்பட விடுதிக் கட்டணம், புத்தகங்கள், வெள்ளை அங்கி, ஸ்டெதஸ்கோப், பல்கலைக்கழகப் பதிவுக் கட்டணம், காப்பீட்டு உள்ளிட்ட எந்த கட்டணங்களையும் வசூலிக்கக்கூடாது. கடந்த ஆண்டு பின்பற்றப்பட்ட அதே நடைமுறையையே இந்த ஆண்டும் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு பெற்ற மாணவா்களுக்கு பின்பற்ற வேண்டும். மேலும், 7.5 சதவீதம் முன்னுரிமை ஒதுக்கீட்டின்கீழ் தோ்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.பி.எஸ். மாணவா்களுக்கு அரசு அனைத்து வகையான கட்டணங்களையும் செலுத்துவதால், எந்த விதமான கல்வி உதவித் தொகைக்கும் அவா்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...