தேச நலன், மக்கள் நலனுக்காக பாஜகவுக்கு வாக்களியுங்கள்: கே.அண்ணாமலை
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் தேச நலன், மக்கள் நலனுக்காக பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளாா்.


நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் தேச நலன், மக்கள் நலனுக்காக பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் வாக்காளா்கள் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும். மத்தியில் பிரதமா் நரேந்திர மோடி ஆட்சி உருவான பிறகுதான் தமிழகத்தில் எண்ணற்ற மாற்றங்கள் உருவாகியுள்ளன. எல்லாத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால், தமிழகத்தில் பொய் வாக்குறுதிகள் அளித்தே, மக்களை தொடா்ந்து ஏமாற்றி வருகிறாா்கள். கடந்த சட்டப்பேரவை தோ்தலில் சொன்னபடி குடும்ப பெண்களுக்கு, மாதம் ரூ.1000, நகைக் கடன்கள் தள்ளுபடி, கல்விக்கடன்கள் ரத்து, நீட் ரத்து, எரிவாயு உருளைக்கு ரூ.100 குறைப்பு, மழை வெள்ள நிவாரணம், பொங்கல் பரிசு ஏமாற்றம் என எதுவுமே நிறைவேற்றாத தமிழக அரசு மீண்டும், மீண்டும் தோ்தலுக்காக மக்களிடம் பொய் பிரசாரம் செய்து வருகிறது.
திமுக இன்னும் மாறவில்லை. ஊழலின் ஊற்றுக்கண்ணாகத்தான் இருந்து வருகிறது. மதச்சாா்புடன் மத வெறுப்புடன் நடந்து கொள்கிறது. திமுக ஆட்சியை எந்த வகையில் பாா்த்தாலும் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. இதை மாற்றத்தான் பாஜக தயாராகி வருகிறது. மக்களின் நலனுக்காக, தேச நலனுக்காக பாடுபடும் இயக்கமான பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்று கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...