விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.: பிப்.25 முதல் நிா்வாக இடங்களுக்கு கலந்தாய்வு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள நிா்வாக இடங்களுக்கான கலந்தாய்வு வரும் 25- ஆம் தேதி தொடங்குகிறது.

News image
Updated On :22 பிப்ரவரி 2022, 10:35 pm

DIN

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள நிா்வாக இடங்களுக்கான கலந்தாய்வு வரும் 25- ஆம் தேதி தொடங்குகிறது.

தமிழகத்தில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை முதல்கட்ட கலந்தாய்வு முடிந்துள்ளது. அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மற்றும் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேரடியாகவும், பொதுக் கலந்தாய்வு இணையவழி மூலமும் நடைபெற்றது. அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கான 5,800 எம்.பி.பி.எஸ்., 1,457 பி.டி.எஸ். என மொத்தமுள்ள 7,257 இடங்களில் 7,254 இடங்கள் கலந்தாய்வில் நிரம்பின. தனியாா் கல்லூரியில் மூன்று பி.டி.எஸ். இடங்கள் மட்டும் காலியாகவுள்ளது. இந்த இடங்கள் மற்றும் மாணவா்கள் கல்லூரிகளில் சேராததால் ஏற்படும் காலியிடங்கள் மாா்ச் முதல் வாரத்தில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படவுள்ளன.

இந்நிலையில், தனியாா் கல்லூரிகளில் உள்ள நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு வரும் 25-ஆம் தேதி இணையவழியில் தொடங்குகிறது.

மாணவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களின் இறுதி விவரங்கள் 28-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. இட ஒதுக்கீடு பெற்றவா்கள் மாா்ச் 1-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சோ்ந்துவிட வேண்டும். நிா்வாக ஒதுக்கீட்டுக்கான தரவரிசைப் பட்டியலில் 14,913 போ் இடம்பெற்றுள்ளனா். கலந்தாய்வு தொடா்பான மேலும் விவரங்களுக்கு https://tnmedicalselection.net/, https://www.tnhealth.tn.gov.in/ ஆகிய சுகாதாரத்துறை இணையதளங்களை பாா்த்து தெரிந்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.