சென்னையில் 28ஆம் தேதி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
சென்னையில் 28ஆம் தேதி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் விஜயா ராணி தெரிவித்துள்ளார்.


சென்னையில் 28ஆம் தேதி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் விஜயா ராணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் திங்கட்கிழமை (28,02,2022) காலை 1,000 மணி முதல் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மீண்டும் நடத்தப்படும்,
மேற்படி கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றுவதோடு கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.விஜயா ராணி தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...