கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

காங். உறுப்பினர் சேர்க்கை: கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனை

தமிழ்நாடு காங்கிரஸ் உறுப்பினர் சேர்ப்பு பணிகள் மற்றும் அமைப்பு தேர்தல் குறித்து கலந்துரையாடல் கூட்டம் இன்று சென்னை, சத்தியமூர்த்தி பவனில் இன்று மாலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தல

News image
Updated On :27 பிப்ரவரி 2022, 2:15 pm

DIN

தமிழ்நாடு காங்கிரஸ் உறுப்பினர் சேர்ப்பு பணிகள் மற்றும் அமைப்பு தேர்தல் குறித்து கலந்துரையாடல் கூட்டம் இன்று சென்னை, சத்தியமூர்த்தி பவனில் இன்று மாலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்றது. 

இதில் தமிழக தேர்தல் அலுவலர் கவுரவ் ககாய், எம்.பி, துணை தேர்தல் அலுவலர்கள் டாக்டர் அஞ்சலி நிம்பல்கர், நெய்யாற்றின்கரை சனல், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் சிரிவெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வப்பெருந்தகை உள்ளிட்ட முன்னணி காங்கிரஸ் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் உறுப்பினர் சேர்ப்பு பணிகளை விரைவுபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் டிஜிட்டல் முறையில் உறுப்பினர் சேர்ப்பது என்பது குறித்தும் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அட்டவணையின்படி உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை நிறைவு செய்வது குறித்து இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.