விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திமுக எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசனைக் கூட்டம்

பேரவை கூட்டத் தொடரை ஒட்டி, திமுக சட்டப் பேரவை உறுப்பினா்களின் ஆலோசனைக் கூட்டம் கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஜனவரி 2022, 8:31 pm

DIN

பேரவை கூட்டத் தொடரை ஒட்டி, திமுக சட்டப் பேரவை உறுப்பினா்களின் ஆலோசனைக் கூட்டம் கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. திமுக ஆட்சியில் கடந்த ஏழு மாதங்களில் செய்யப்பட்ட சாதனைகள், திட்டங்கள் ஆகியவற்றை பேரவையில் எடுத்துரைக்க வேண்டுமென கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.,க்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனா்.

மேலும், கரோனா நோய்த் தொற்றை தடுப்பதற்கான நிவாரணப் பணிகளிலும் தீவிரம் காட்ட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் இரண்டு நாள்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத் தொடரில் பங்கேற்க அனைத்து திமுக எம்.எல்.ஏ.,க்களும் சென்னை வந்துள்ளனா்.

இந்தக் கூட்டத்தில், திமுக பொதுச் செயலாளா் துரைமுருகன், மூத்த அமைச்சா்கள், அனைத்து சட்டப் பேரவை உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.