தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

இருமல், காய்ச்சலா?: பொதுமக்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தல்

இருமல், சளி, காய்ச்சல் பொன்றவை இருந்தால் மக்கள் அருகில் உள்ள கரோனா பரிசோதனை மையங்களுக்கு வந்து பரிசோதனை செய்துகொள்ள சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

News image

உதவி எண்கள்..

Updated On :5 ஜனவரி 2022, 6:21 am

இருமல், சளி, காய்ச்சல் பொன்றவை இருந்தால் மக்கள் அருகில் உள்ள கரோனா பரிசோதனை மையங்களுக்கு வந்து பரிசோதனை செய்துகொள்ள சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி சார்பில் கரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை காலை முதல் மாலை வரை செயல்பட்டு வருகின்றன. 

மெகா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதில் அவை தடுப்பூசி மையங்களாகவும் செயல்பட்டு வருகின்றன. 

இதனால், உடல் நிலையில் சோர்வை உணர்பவர்கள், பரிசோதனை மையங்களுக்கு வந்து கரோனா பரிசோதனை செய்துகொள்ளலாம் 

காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகள் இருப்போர் நேரடியாக வந்து பரிசோதனை செய்துக்கொள்ளலாம் என்று மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

இதற்காக 1913, 044 25384520, 044 46122300 ஆகிய எண்ளைத் தொடர்புகொண்டு பரிசோதனை மையங்களில் தகவல்களை அறியலாம் என்றும் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.