நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

தமிழகத்தில் 13 ஆயிரத்தை நெருங்கிய தினசரி பாதிப்பு

தமிழகத்தில் இன்று மேலும் 12,895 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :9 ஜனவரி 2022, 2:50 pm

DIN

தமிழகத்தில் இன்று மேலும் 12,895 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட அறிக்கை: மாநிலத்தில் இதுவரை 5.85 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று மட்டும் 1.48 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில் மேலும் 10,978 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

இதனிடையே இன்று வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக சென்னையில் 6,186 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 1,512 பேரும், திருவள்ளூரில் 702, கோவையில் 608 பேரும் பாதிக்கப்பட்டிருந்தனா்.

தற்போதைய நிலவரப்படி 51,335 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். மற்றொருபுறம் மேலும் 1,808 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 27,12,096-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 12 போ் பலியானதை அடுத்து, நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,855-ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட 185 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.