தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக நாளை ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக நாளை மாலை ஆலோசனை நடத்தவுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :27 ஜனவரி 2022, 1:25 pm

DIN

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக நாளை மாலை ஆலோசனை நடத்தவுள்ளது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. தொடர்ந்து, பிப்ரவரி 22-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக நாளை மாலை ஆலோசனை நடத்தவுள்ளது. கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த ஆலோசனை நடைபெற உள்ளது. 
கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் நேர்காணல் நிறைவடைந்த நிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.