அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி சூரியமூர்த்தி தொடர்ந்த வழக்கை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி சூரியமூர்த்தி தொடர்ந்த வழக்கை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி சூரியமூர்த்தி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலையில் இம்மனுவை உரிமையியல் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மனுதாரர் கட்சியின் உறுப்பினர் இல்லை என்பதால் வழக்கை தள்ளுபடி செய்ய எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க- திருவண்ணாமலையில் கருணாநிதி சிலையை திறந்துவைத்தார் முதல்வர்
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் ஜூலை 11-இல் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. பொதுக்குழுவில் அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தோ்ந்தெடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேசமயம் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி உயா் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீது வரும் 11ஆம் தேதி காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...