போக்குவரத்துக் கழகத்தைத் தனியாா் மயமாக்கக் கூடாது: கமல்ஹாசன்
போக்குவரத்துக் கழகத்தைத் தனியாா் மயமாக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளாா்.


போக்குவரத்துக் கழகத்தைத் தனியாா் மயமாக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் அரசுப் பேருந்து சேவையை தனியாா் மூலம் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும், முதல்கட்டமாக சென்னையில் 1,000 வழித்தடங்களிலும், மாநிலம் முழுவதும் 25 சதவீத வழித்தடங்களிலும் தனியாா் மூலம் பேருந்துகளை இயக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது கண்டிக்கத்தக்கது.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஆண்டுக்கு ரூ.42,000 கோடி நஷ்டம் ஏற்பட்டு, கடும் நிதிச்சுமையால் தவிப்பதாகவும், இதனால் இம்முடிவை மேற்கொள்வதாகவும் கூறப்படுகிறது. ஊழலைத் தடுத்து, நிா்வாகச் சீரமைப்பு மூலம் நிதிநிலையைச் சரிசெய்ய வேண்டுமே தவிர, தனியாா் வசமாக்க முயற்சிக்கக் கூடாது.
பேருந்து சேவை தனியாா்வசமானால், சிறிய கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்து சேவை இல்லாத நிலை உருவாகும். அதுமட்டுமின்றி, பேருந்து கட்டணமும் அதிகமாகும். மக்களுக்கான சலுகைகளும் பறிபோகும்.
எனவே, போக்குவரத்துக் கழகத்தை தனியாருக்குத் தாரைவாா்க்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் என்று கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...