திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

காலி மதுபாட்டில் திரும்பப் பெறும் திட்டம்: மேலும் அவகாசம்

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெற திட்டம் வகுக்க உயர்நீதிமன்றம் மேலும் அவகாசம் வழங்கியுள்ளது.

News image
Updated On :15 ஜூலை 2022, 3:39 pm IST

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெற திட்டம் வகுக்க உயர்நீதிமன்றம் மேலும் அவகாசம் வழங்கியுள்ளது.

நீலகிரி உள்ளிட்ட மலை மற்றும் காடு சாா்ந்த மாவட்டங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், காலி மதுபாட்டில்களை வனப்பகுதிகளில் வீசுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக சமூக ஆா்வலா்கள் குற்றம்சாட்டி வந்தனா். இதைக் கட்டுப்படுத்தும் விதமாக, நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யும் மது பாட்டில்களில், ‘ஈசி 10’ என்னும் ஸ்டிக்கா் ஒட்டி 10 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்யும் நடவடிக்கை கொண்டுவரப்பட்டது. 

இந்த ஸ்டிக்கா் ஒட்டப்பட்ட மதுபாட்டில்கள், பயன்படுத்தப்பட்ட பிறகு டாஸ்மாக் கடைகளில் ஒப்படைத்து 10 ரூபாயை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை இவ்வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது டாஸ்மாக் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறுவதை, நீலகிரியை தொடா்ந்து, மாநிலம் முழுவதும் அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுத்து, அதனை வரும் ஜூலை 15-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க டாஸ்மாக் நிா்வாகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா். 

மேலும், காலி மதுபாட்டில்களை ஒப்படைப்பது தொடா்பாக விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் விளம்பரங்கள் வெளியிட வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்பை சரிசெய்ய வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனா். இந்நிலையில் இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெற திட்டம் வகுக்க டாஸ்மாக் நிர்வாகத்திற்கு மேலும் ஒரு மாதம் கூடுதல் அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.