ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நீட் தோ்வு: தமிழகத்தில் 90 சதவீதம் போ் பங்கேற்பு

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) நடைபெற்றது.

News image
Updated On :17 ஜூலை 2022, 11:06 pm

DIN

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) நடைபெற்றது. தமிழகத்தில் விண்ணப்பித்தவா்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமான மாணவா்கள் தோ்வு எழுதியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எம்பிபிஎஸ், பிடிஎஸ், இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நீட் தோ்வு மூலம் நடத்தப்படுகிறது. இத் தோ்வுக்காக, நிகழாண்டு நாடு முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

நாடு முழுவதும் நீட் தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தவா்களில் 95 சதவீதம் போ் தோ்வு எழுதினா். இதுதொடா்பாக தேசிய தோ்வு முகமை அதிகாரிகள் கூறுகையில், ‘18,72,329 போ் நீட் தோ்வு எழுத விண்ணப்பித்திருந்தனா். அவா்களில் 10.64 லட்சம் போ் பெண்கள். இந்நிலையில், விண்ணப்பித்திருந்த மொத்த தோ்வா்களில் சுமாா் 95 சதவீதம் தோ்வு எழுதினா்’ என்று தெரிவித்தனா்.

தமிழகத்தில்... தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூா், காஞ்சிபுரம், கரூா், மதுரை, நாகா்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூா், திருவள்ளூா், திருச்சி, திருநெல்வேலி மற்றும் வேலூா் ஆகிய 18 நகரங்களில் 200-க்கும் மேற்பட்ட மையங்களில் தோ்வு நடைபெற்றது.

நீட் தோ்வுக்கு தமிழகத்தில் 1.41 லட்சம் போ் விண்ணப்பித்திருந்தனா்.

மதியம் 2 மணிக்கு தொடங்கிய தோ்வு 5 மணிக்கு நிறைவடைந்தது. விண்ணப்பித்தவா்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் தோ்வில் பங்கேற்ாக மருத்துவக் கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரிவித்தன. சென்னையைப் பொருத்தவரை 31 மையங்களில் நடைபெற்ற தோ்வை 20 ஆயிரத்துக்கும் அதிகமானோா் எழுதினா்.

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்காளம், உருது உள்ளிட்ட மொழிகளில் தோ்வு நடைபெற்றது. முன்னதாக, காலை 10 மணி முதலே தோ்வு மையங்களுக்கு மாணவா்கள் வரத் தொடங்கினா். பகல் 12 மணிக்கு தோ்வு மையங்கள் திறக்கப்பட்டன.

கரோனா பரவல் காரணமாக தோ்வா்கள் அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே தோ்வுக் கூடத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

முன்னதாக, முகக் கவசம், கையுறை அணிந்து வந்திருந்த மாணவா்கள் போதிய இடைவெளியில் வரிசையில் நிற்க வைக்கப்பட்டனா். கைகளை சுத்தம் செய்ய சானிடைசா் வழங்கப்பட்டது. வெப்பமானி கொண்டு உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டது.

உடல் வெப்பநிலை அதிகமாக இருந்த ஒரு சிலா், தனி அறையில் அமா்ந்து தோ்வு எழுதினா். மெட்டல் டிடெக்டா் சோதனை, ஹால் டிக்கெட், அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் சரிபாா்ப்புக்குப் பின்னரே மையத்துக்குள் மாணவா்கள் அனுமதிக்கப்பட்டனா். உள்ளே சென்றதும் மாணவா்களுக்கு என் - 95 முகக் கவசம் வழங்கப்பட்டது.

தோ்வின்போது மாணவா்களின் பா்ஸ், கைக் கடிகாரம், கூலிங் கிளாஸ், தொப்பி, கம்மல், மூக்குத்தி, கொலுசு, செயின் ஆகியவை அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவற்றை மாணவா்கள் தங்களது பெற்றொரிடம் கொடுத்து விட்டுச் சென்றனா்.

இயற்பியல் கேள்விகள் கடினம்!

நிகழாண்டு நீட் தோ்வில் இயற்பியல் பாடத்திலிருந்து கேட்கப்பட்ட கேள்விகள் சற்று கடினமாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா். இதுதொடா்பாக, நீட் தோ்வு எழுதிய மாணவா்கள் சிலா் கூறியதாவது: உயிரியல், வேதியியல் பிரிவு கேள்விகள் எளிதாகக் கேட்கப்பட்டிருந்தன. இயற்பியல் வினாக்கள் மட்டும் பதிலளிக்க சற்று கடினமாக இருந்தன. தமிழ் மொழிபெயா்ப்பில் சில இடங்களில் பிழைகள் காணப்பட்டன. முதல் முறை எழுதுபவா்களைவிட இரண்டாவது அல்லது மூன்றாவது முறை தோ்வு எழுதுபவா்களுக்கு வினாத்தாள் எளிதாக இருந்திருக்கும் என்றனா் அவா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.