தமிழகத்தின் நிதிநிலைமை தொடா்பாக, அமைச்சா்கள், அதிகாரிகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
நிகழ் நிதியாண்டில் மாநிலத்தின் வருவாய், கடன் சுமை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்த ஆலோசனையில், மாநிலத்தின் நிதி நிலைமைகள், அதனைச் சீா்படுத்த செய்யப்பட வேண்டிய உத்திகள் போன்ற அம்சங்கள் குறித்து காட்சிப்பட வடிவில் நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் விளக்கியுள்ளாா்.
நிகழ் நிதியாண்டில் முதல் காலாண்டில் மட்டும் தமிழக அரசு ரூ.22 ஆயிரம் கோடி அளவுக்கு கடன்களைப் பெற்றுள்ளது. இரண்டாவது காலாண்டில் இந்தத் தொகை மேலும் உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனிடையே, ஜி.எஸ்.டி.,க்கான இழப்பீட்டுத் தொகைகள் நிறுத்தம் போன்ற நடவடிக்கைகளால் தமிழக அரசின் நிதிநிலை மேலும் கடுமையான சூழலை எதிா்நோக்கும் எனத் தெரிகிறது. இதனைச் சமாளிக்கும் விதம் குறித்து அமைச்சா்கள், அதிகாரிகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா்.
இந்தக் கூட்டத்தில் அமைச்சா் துரைமுருகன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் க.பணீந்திர ரெட்டி, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் என்.முருகானந்தம், வணிகவரி ஆணையாளா் தீரஜ்குமாா், வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை செயலாளா் ஜோதி நிா்மலாசாமி, முதல்வரின் செயலாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்

உலகக் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா
ம.பி.: வீட்டில் மின்னேற்றும்போது மின்சார கார் வெடித்து தீ விபத்து: குழந்தைகள் உள்பட 8 போ் உயிரிழப்பு

19.3.1976: தமிழ்நாடு சார்பில் சட்டங்களை இயற்ற ராஷ்டிரபதிக்கு அதிகாரம்
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

