27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

செஸ் ஒலிம்பியாட்: 4 மாவட்டங்களுக்கு உள்ளூா் விடுமுறை

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடப்பதையொட்டி ஜூலை 28 ஆம் தேதி 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :23 ஜூலை 2022, 2:56 pm IST

சென்னை: மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடப்பதையொட்டி ஜூலை 28 ஆம் தேதி 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடப்பதையொட்டி  ஜூலை 28 ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை என அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க நாளான ஜூலை 28-ஆம் தேதி, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு உள்ளூா் விடுமுறை அளிக்க ஆலோசிக்கப்பட்டது. இதுதொடா்பான கூட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடா்பாக பல்வேறு துறைகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சா்கள் விளக்கினா்.

உள்ளூா் விடுமுறை: செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி, சுற்றுலாத் துறை சாா்பில் ஏராளமான கலைநிகழ்ச்சிகள், சிறப்புப் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த விவரங்களை சுற்றுலாத் துறை அமைச்சா் மதிவேந்தன் எடுத்துரைத்தாா். மேலும், செஸ் ஒலிம்பியாட் தொடக்க நாளான, வருகிற 28-ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூா் விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை என அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.