இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வைகோ வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பொருளாதார வீழ்ச்சியால் நிலைகுலைந்து இருக்கும் இலங்கை அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கொதித்து எழுந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அந்நாட்டு அரசு இயந்திரம் நொறுங்கிக் கிடக்கிறது. ஆனால், சிங்கள கடற்படையினர் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களைக் கைது செய்து, இலங்கை சிறையில் அடைப்பதும், மீன்பிடிப் படகுகள் மற்றும் கருவிகளைப் பறிமுதல் செய்வதும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
மீன்பிடித் தடைக்காலம் 61 நாள்கள் முடிந்து ஜூன் 15 முதல் மீனவர்கள் மீண்டும் மீன்பிடித் தொழிலுக்குச் சென்றுள்ளனர். கடந்த ஜூலை 1 ஆம் தேதி புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மற்றும் மயிலாடுதுறைப் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 12 பேரை வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி வந்த இலங்கை கடற்படையினர் கைது செய்து, படகுகளையும் பறிமுதல் செய்தனர். ஜூலை 4 ஆம் தேதி ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்து, காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.
கடந்த ஜூலை 21 ஆம் தேதி இராமேசுவரத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் தமிழக மீனவர்கள் தனுஷ்கோடி, தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், ஒரு விசைப்படகையும், அதில் இருந்த அந்தோணி, அஜித் உள்ளிட்ட 6 மீனர்களையும் கைது செய்து இலங்கையின் வவுனியா சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் படிக்க | அதிமுகவில் புதிதாக 14 மாவட்டச் செயலாளர்கள் நியமனம்: ஓபிஎஸ் அறிவிப்பு
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதையும், தாக்குதலுக்கு உள்ளாவதைக் கண்டித்தும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரியும், ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை ஜூலை 23 முதல் தொடங்கியுள்ளனர். இதில் 5 ஆயிரம் மீனவர்கள் பங்கேற்று உள்ளனர்.
துறைமுகத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் ஒரு நாளைக்கு ரூ.5 கோடி வரை மீன்பிடி வர்த்தகம் பாதிக்கப்படுவதுடன், மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை அத்துமீறி நமது கடற்பரப்பில் நுழைந்து கைது செய்வதை மத்திய அரசு தடுத்தி நிறுத்திடாமல் அலட்சியப்போக்குடன் வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள என வைகோ வலியுறுத்தி உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தெருநாய்களுக்கான காப்பக கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க மேயா் உத்தரவு

பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை மறு பரிசீலனை செய்யக் கோரிக்கை

போா்நிறுத்துக்கு இடையே ஈரானில் அமெரிக்கா தாக்குதல்

எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் ஓா் எம்எல்ஏ ஆதரவு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



