
ஆடி அமாவாசையை ஒட்டி தாராபுரம் அமராவதி ஆற்றங்கரையில் ஆயிரக்கணக்கானோர் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
ஆடி அமாவாசை நாளில் தீா்த்த தலங்களுக்கு சென்று எள், தண்ணீா் இறைத்து அவா்களின் தாகத்தை தீா்க்க வேண்டும் என்பது ஐதீகம். அவ்வாறு செய்வதால் பாவங்கள் நீங்கி அவா்களுக்கு முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

அமராவதி ஆற்று பாலத்தின் கீழ் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு பிண்டம் பிடித்து படைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
இந்த நிலையில் தாராபுரம் ஈஸ்வரன் கோவில் அமராவதி ஆற்று பாலத்தின் கீழ் இன்று காலை 5 மணி முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு வாழை இலையில் அரிசி மாவால் பிண்டம் பிடித்து, வாழைப்பழம், வெற்றிலை, ஊதுபத்தி ஆகியவற்றை படைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் அந்த பிண்டத்தை அமராவதி ஆற்றில் கரைத்தனர்.
தொடர்ந்து அமராவதி ஆற்றில் புனித நீராடினர். அமராவதி ஆற்றங்கரையில் ஏராளமானவர்கள் தங்களது குடும்பத்தினருடன் குவிந்தனர்.
இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் போக்குவரத்தை சீரமைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







