தமிழகத்தில் திமுக தலைமையிலான கொள்கைக் கூட்டணி தொடரும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூரில் மனோரமா நியூஸ் கான்க்ளேவ் 2022 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் காணொலி மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். உரை முடிந்து அவரிடம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் சில கேள்விகளை எழுப்ப அதற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.
அப்போது கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்துவரும் நிலையில், தமிழகத்தில் திமுக - மார்க்சிஸ்ட் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதில் அளித்த முதல்வர், 'தமிழகத்தில் கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களும் எங்களுக்கு ஆலோசனைகளைத் தருகிறார்கள், பிரச்னைகளை எடுத்துரைக்கிறார்கள்.
திமுக கூட்டணி தேர்தலுக்கான கூட்டணி அல்ல, கொள்கைக்கான கூட்டணி. இந்த கூட்டணி ஆரோக்கியமான முறையில் தொடரும்' என்றார்.
முன்னதாக, செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகையாலும், விழாவுக்கான தமிழக அரசின் ஏற்பாடுகளை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பாராட்டியதாலும் திமுகவுடன் பாஜக கூட்டணி சேருகிறதா? என்ற கோணத்தில் கேள்வி எழுப்பப்பட்டு வந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு பேசியுள்ளது அதற்கு பதில் அளிப்பதாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மாறவேண்டும் மனநிலை!

ரூ. 6.30 கோடியில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு புதிய கட்டடம்

மதுராந்தகம் நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

எஸ்.பி. பொறுப்பேற்பு...
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

