ராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுதோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சென்னையில் மலர்க் கண்காட்சி இன்று தொடங்கியது! - முழு விவரம்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, சென்னையில் முதல்முறையாக மலர்க் கண்காட்சி இன்று தொடங்கியது. 

News image

சென்னையில் மலர்க் கண்காட்சியை சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார். 

Updated On :3 ஜூன் 2022, 7:21 am

DIN

சென்னையில் முதல்முறையாக மலர்க் கண்காட்சி இன்று தொடங்கியது. 

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இந்த கண்காட்சியினை இன்று தொடக்கிவைத்தார். 

சென்னை கலைவாணர் அரங்கில் தோட்டக்கலைத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மலர்க் கண்காட்சியினை இன்று முதல் மூன்று நாள்களுக்கு (ஜூன் 3- 5) காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை  பார்க்கலாம்.

Story image

ஊட்டி, கொடைக்கானல், மைசூரு போன்ற இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட வண்ண மலர்களால் அமைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட வகைகளில் கண்ணை கவரும் மலர்கள் இடம்பெற்றுள்ளன.

கண்காட்சியில் மலர்களால் உருவாக்கப்பட்ட பறவை, விலங்குகள், காய்கறிகளால் அமைக்கப்பட்ட பொம்மைகள் மற்றும் சுயபடம் எடுப்பதற்கானஇடங்கள் பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டுள்ளன. மலர் கண்காட்சிக்கான நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.50, மாணவர்களுக்கு ரூ.20 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  

Story image

கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி தமிழக அரசு சார்பில் முதல்முறையாக சென்னையில் மலர்க் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்று மலர்க் கண்காட்சி நடத்தப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.