அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பாஜகவை விமர்சித்த பொன்னையன்: முற்றுப்புள்ளி வைத்த ஓபிஎஸ்

பாஜக தொடர்பாக பொன்னையன் தெரிவித்தது அவரது சொந்தக் கருத்து என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

News image
ஓ.பன்னீா்செல்வம்
Updated On :3 ஜூன் 2022, 1:17 pm

DIN

பாஜக தொடர்பாக பொன்னையன் தெரிவித்தது அவரது சொந்தக் கருத்து என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் பொன்னையன் பேசும்போது அதிமுகவைப் பயன்படுத்தி பாஜக வளர முயற்சிப்பதாகவும், பாஜகவை அதிமுகவினர் அம்பலப்படுத்த வேண்டும் எனவும் பேசியது அரசியல் அரங்கில் பேசுபொருளானது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பொன்னையன் தெரிவித்த கருத்து அவரது சொந்தக் கருத்து எனத் தெரிவித்தார். 

செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம் பாஜக தொடர்பாக பொன்னையன் பேசியதாக வெளிவந்த கருத்து கட்சியின் கருத்தல்ல எனவும், அவை பொன்னையனின் சொந்தக் கருத்தாக மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர் மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுகவின் வேட்பாளர்களுக்கு ஆதரவளித்த பாஜகவிற்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.