தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

சாலையில் சென்று கொண்டிருந்த ராயல் என்ஃபீல்டு பைக் திடீரென பற்றி எரிந்தது: சென்னையில் பரபரப்பு

சென்னையில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

News image
சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர்கோட்டம் சாலையில் சென்று கொண்டிருந்த ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்தது
Updated On :8 ஜூன் 2022, 8:00 am

DIN

சென்னையில் சாலையில் சென்று கொண்டிருந்த ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர்கோட்டம் சாலை வழியாக புதன்கிழமை காலை இளைஞர் ஒருவர் தனது ராயல் என்ஃபீல்டு பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார். 

அப்போது, திடீரென பைக் அதிகமாக வெப்பமாவதை உணர்ந்த அந்த இளைஞர், உடனடியாக பைக்கை சாலையோரமாக நிறுத்திய அடுத்த சிறிது நேரத்திலேயே பைக் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. 

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர், அருகிலிருந்த உணவகத்தில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து தீயை அணைக்க முயன்றார். அங்கு இருந்த பொதுமக்களும் பைக்கில் தண்ணீரை ஊற்றினர். ஆனால் தீ கட்டுக்குள் வரவில்லை.

இந்நிலையில், தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.