பல்கலைக்கழகங்களில் 69% இடஒதுக்கீடு பின்பற்றப்படும்: அமைச்சர் பொன்முடி

பல்கலைக்கழகங்களில் 69% இடஒதுக்கீடு கட்டாயம் பின்பற்றப்படும் என்று உயர்கல்வித்துறை  அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பொன்முடி(கோப்புப்படம்)
அமைச்சர் பொன்முடி(கோப்புப்படம்)

சென்னை: பல்கலைக்கழகங்களில் 69% இடஒதுக்கீடு கட்டாயம் பின்பற்றப்படும் என்று உயர்கல்வித்துறை  அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் அனைத்து கல்லூரிகளிலும் முழு பாடங்கள் நடத்த உத்திரவிடப்பட்டுள்ளது. பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளிலும் முழுபாடங்களையும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து  கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் 69% இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற அமைச்சர் பொன்முடி சுற்றறிக்கை விடுத்துள்ளார்.  மதுரை காமராஜர் பல்கலை. மாணவர் சேர்க்கையிலும் 69% இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற அரசு உத்திரவிட்டுள்ளது.

மதிப்பெண் அடிப்படையில் 31% இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் மற்றும் கல்லுரிகளில் மாணவர் சேர்க்கை மட்டிமின்றி வேலைவாய்ப்பிலும் 69% இடஒதுக்கீடு பின்பற்ற தமிழக அரசு உறுதி அளித்துள்ளது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுகளில் குறைக்கப்பட்ட பாடங்களையும் சேர்த்து முழுமையாக நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கரோனா காரணமாக 2 ஆண்டுகளாக பாடங்கள் குறைத்து நடத்தப்பட்ட நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 10-ம் வகுப்புக்கு 39%, 11, 12-ம் வகுப்புகளுக்கு 35%, 1-9-க்கு வகுப்புகளுக்கு 50% பாடங்கள் குறைக்கப்பட்டு இருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com