மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒற்றைத் தலைமை சர்ச்சை: தொண்டர்களுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்

அதிமுகவில் மீண்டும் ஒற்றைத் தலைமை தொடர்பான சர்ச்சை வெடித்துள்ள நிலையில் தொண்டர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News image
ஒற்றைத் தலைமை சர்ச்சை: தொண்டர்களுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்
Updated On :15 ஜூன் 2022, 4:21 pm

DIN

அதிமுகவில் மீண்டும் ஒற்றைத் தலைமை தொடர்பான சர்ச்சை வெடித்துள்ள நிலையில் தொண்டர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு வரும் ஜூன் 23-இல் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் அதிமுகவின் அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன. முன்னதாக அதிமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமைதான் இருக்க வேண்டும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமியிடம் பெரும்பாலான மாவட்டச் செயலாளா்கள் வலியுறுத்தினா்.

இதனைத் தொடர்ந்து அதிமுகவின் ஒற்றைத் தலைமை குறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதன்கிழமை இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரையும் தயவுசெய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என ஓ.பன்னீர்செல்வம் பதிவிட்டுள்ளார்.

அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றைத் தலைமை சர்ச்சை தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.